Aathichudi in Tamil
ஆசிரியர் ஔவையார் பாடல்கள் 109 இலக்கணம் காப்புச் செய்யுள் கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே சிவ பெருமானின் அன்புக்குரிய பிள்ளையாகிய விநாயகரை நாம் எப்பொழுதும் வழிபட்டு வணங்குவோமாக உயிர் வருக்கம் 1 அறம் செய விரும்பு எல்லோருமே அறம் செய்ய விரும்ப வேண்டும். 2 ஆறுவது சினம் தனிமனிதனை நிலைகுலையச் செய்வதில் சினம் தலைமை இடத்தைப் பெறுகிறது. எனவே, ஒருவன் சினத்தை அடக்க வேண்டும். 3 இயல்வது கரவேல் …