Aathichudi in Tamil

ஆசிரியர்ஔவையார்
பாடல்கள்109
இலக்கணம்காப்புச் செய்யுள்

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

சிவ பெருமானின் அன்புக்குரிய பிள்ளையாகிய விநாயகரை நாம் எப்பொழுதும் வழிபட்டு வணங்குவோமாக

உயிர் வருக்கம்

1அறம் செய விரும்புஎல்லோருமே அறம் செய்ய விரும்ப வேண்டும்.
2ஆறுவது சினம்தனிமனிதனை நிலைகுலையச் செய்வதில் சினம் தலைமை இடத்தைப் பெறுகிறது. எனவே, ஒருவன் சினத்தை அடக்க வேண்டும்.
3இயல்வது கரவேல்உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.
4ஈவது விலக்கேல்தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.
5உடையது விளம்பேல்உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.
6ஊக்கமது கைவிடேல்முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.
7எண் எழுத்து இகழேல்கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8ஏற்பது இகழ்ச்சியாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.
9ஐயம் இட்டு உண்யாசிப்பவருக்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10ஒப்புரவு ஒழுகுஉலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.
11ஓதுவது ஒழியேல்நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12ஒளவியம் பேசேல்ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.
13அஃகம் சுருக்கேல்அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்

14கண்டொன்று சொல்லேல்பொய் சாட்சி சொல்லாதே.
15ஙப் போல் வளை‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க ‘ஙா’ வரிசை எழுத்துக்களை தழுவுகிறதோ! அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
16சனி நீராடுசனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.
17ஞயம்பட உரைகேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
18இடம்பட வீடு எடேல்தேவைக்கேற்ப வீட்டை கட்டிக்கொள்.
19இணக்கம் அறிந்து இணங்குஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்.
20தந்தை தாய்ப் பேண்உன் தந்தையையும் தாயையும் இறுதிக்காலம் வரை அன்புடன் இருந்து காப்பாற்று.
21நன்றி மறவேல்ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.
22பருவத்தே பயிர் செய்ஒரு செயலை செய்யும்பொழுது அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23மண் பறித்து உண்ணேல்பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.
24இயல்பு அலாதன செய்யேல்நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25அரவம் ஆட்டேல்பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26இலவம் பஞ்சில் துயில்இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
27வஞ்சகம் பேசேல்உண்மைக்கு புறம்பான கவர்ச்சிகரமான சொற்களை பேசாதே.
28அழகு அலாதன செய்யேல்இழிவான செயல்களை செய்யாதே.
29இளமையில் கல்இளம்பருவத்திலே கற்க வேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.
30அறனை மறவேல்தருமத்தை எப்பொழுதும் மனதில் நினைக்க வேண்டும்.
31அனந்தல் ஆடேல்மிகுதியாக தூங்காதே.

ககர வருக்கம்

32கடிவது மறயாரையும் கோபத்தில் கடிந்து பேசாதே.
33காப்பது விரதம்தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்.
34கிழமை பட வாழ்பிறருக்கு நன்மை செய்து வாழ்.
35கீழ்மை அகற்றுஇழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36குணமது கைவிடேல்நன்மை தரக்கூடிய குணங்களை கைவிடாதே.
37கூடிப் பிரியேல்நல்லவரோடு நட்பு செய்து பழகி பின் அவரை விட்டு பிரியாதே.
38கெடுப்ப தொழிபிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39கேள்வி முயல்கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
40கைவினை கரவேல்தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41கொள்ளை விரும்பேல்பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே.
42கோதாட்டு ஒழிகுற்றமான விளையாட்டை விட்டு விடு.
43கௌவை அகற்றுவாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.

சகர வருக்கம்

44சக்கர நெறி நில் பண்டும்.தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.
45சான்றோர் இனத்து இருஅறிவு ஒழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46சித்திரம் பேசேல்பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே.
47சீர்மை மறவேல்புகழுக்குக் காரணமான குணங்களை மறந்து விடாதே.
48சுளிக்கச் சொல்லேல்கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.
49சூது விரும்பேல்ஒருபொழுதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50செய்வன திருந்தச் செய்செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
51சேரிடமறிந்து சேர்நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு.
52சையெனத் திரியேல்பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53சொற்சோர்வு படேல்பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54சோம்பித் திரியேல்சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்

55தக்கோன் எனத் திரிபெரியோர்கள் உன்னைத் யோக்கியன், நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள்.
56தானமது விரும்புவேண்டுபவருக்கு தானம் செய்.
57திருமாலுக்கு அடிமை செய்நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
58தீவினை யகற்றுபாவச் செயல்களை இருந்து விலகி இரு.
59துன்பத்திற்கு இடங்கோடேல்முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.
60தூக்கி வினைசெய்உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
61தெய்வம் இகழேல்கடவுளை பழித்து பேசாதே.
62தேசத்தோடு ஒட்டி வாழ்நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் கூடி வாழ்.
63தையல்சொல் கேளேல்மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடக்காதே.
64தொன்மை மறவேல்பழைமையை மறவாதிருக்க வேண்டும்.
65தோற்பன தொடரேல்தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்த செயலை தொடங்காதே.

நகர வருக்கம்

66நன்மை கடைப்பிடிநல்வினை செய்வதை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
67நாடு ஒப்பனை செய்நாட்டில்(சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
68நிலையிற் பிரியேல்உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69நீர்விளை யாடேல்வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதோ.
70நுண்மை நுகரேல்நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
71நூல்பல கல்அறிவை வளர்க்கும் நூல்களைப் படி.
72நெற்பயிர் விளைநெற்பயிரை விளையச் செய்.
73நேர்பட ஒழுகுஒழுக்கம் தவறாமல் நேர்மையான வழியில் வாழ்.
74நைவினை நணுகேல்பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே.
75நொய்ய உரையேல்அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.
76நோய்க்கு இடம் கொடேல்உணவு மற்றும் உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
77பழிப்பன பகரேல்பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை பேசாதே.

பகர வருக்கம்

78பாம்பொடு பழகேல்பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்களுடன் பழகாதே.
79பிழைபடச் சொல்லேல்குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
80பீடு பெறநில்பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.
81புகழ்ந்தாரைப் போற்றி வாழ்நம்பியவர்களை ஆதரித்து வாழ்.
82பூமி திருத்தியுண்நிலத்தை உழுது பயிர்செய்து உண்.
83பெரியாரைத் துணைக்கொள்அறிவிலே சிறந்த சான்றோர்களை உனக்குத் துணையாக கொள்.
84பேதைமை யகற்றுஅறியாமையைப் போக்கு
85பையலோடு இணங்கேல்அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86பொருள்தனைப் போற்றிவாழ்பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து வாழ்.
87போர்த்தொழில் புரியேல்யாருடனும் கலகம் செய்யாதே.

மகர வருக்கம்

88மனந்தடு மாறேல்எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே
89மாற்றானுக்கு இடம்கொடேல்பகைவன் உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90மிகைபடச் சொல்லேல்சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91மீதூண் விரும்பேல்மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92முனைமுகத்து நில்லேல்போர் முனையிலே நிற்காதே
93மூர்க்கரோடு இணங்கேல்மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
94மெல்லி நல்லாள் தோள்சேர்பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95மேன்மக்கள் சொற்கேள்நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.
96மைவிழியார் மனையகல்விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
97மொழிவது அறமொழிசொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்
98மோகத்தை முனிவாழ்வில் நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை முறித்துவிடு.

வகர வருக்கம்

99வல்லமை பேசேல்உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
100வாதுமுற் கூறேல்பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதிடாதே.
101வித்தை விரும்புகல்வியாகிய நற்பொருளை விரும்பு.
102வீடு பெறநில்முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே நடந்து கொள்.
103உத்தமனாய் இருஉயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104ஊருடன் கூடிவாழ்ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
105வெட்டெனப் பேசேல்யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
106வேண்டி வினைசெயேல்வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
107வைகறை துயில் எழுநாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
108ஒன்னாரைத் தேறேல்பகைவரை நம்பாதே.
109ஓரஞ் சொல்லேல்எந்த வழக்கிலும் ஒரு பக்கம் மட்டும் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

About Aathichudi

Aathichudi is a classic Tamil literary work attributed to the ancient Indian poet Avvaiyar. Avvaiyar is a title given to a group of female poets in Tamil literature, and it is not the name of an individual poet. The most famous among them is often considered to be Avvaiyar lived during different periods in Tamil history.

The Aathichudi is a collection of single-line maxims or Kurals (short verses) written in the form of A-B pairs, where the first half of the verse introduces an idea, and the second half completes it or provides a counterpoint. Each verse imparts valuable life lessons and moral teachings.

Aathichudi is widely studied in Tamil literature and is often used as a tool for teaching morality, ethics, and language to children. It covers a broad range of topics, including virtue, justice, love, wealth, and more. The simplicity and profound wisdom of Aathichudi have made it a timeless and cherished piece of literature in Tamil culture.

The above summary was generated by ChatGPT

1 thought on “Aathichudi in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top